இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் போர்க்கள தளபதி மரணம்... பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு; 1600க்கும் அதிகமானோர் படுகாயம்!

 
இஸ்ரேல்

 இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போர்க்கள தளபதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. லெபனானில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது. 

இஸ்ரேல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், லெபனானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 492ஆக அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய குண்டு வீச்சு தாக்குதலில் 1600க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்

இது தொடர்பாக ஹமாஸின் ஆயுதப்படை பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போர்கள தளபதி மஹ்மூத் அல் நாடர் (Mahmoud Al Nader) கொல்லப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web