ஹமாஸ் பொதுவெளியில் 8 பாலஸ்தீனியர்களை சுட்டுக்கொலை... .வெளியேறும் இஸ்ரேல் படை!

 
ஹமாஸ்
 

காஸாவில் ஹமாஸ் பொதுவெளியில் 8 பாலஸ்தீனியர்களை வெறியாற்றி சுட்டுக்கொன்றது அச்சம் கிளப்பியுள்ளது. இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து வெளியேறும் நிலையில், ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாளில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா

இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச அமைதித் திட்டத்தை பரிந்துரைத்தார். இதில் இருதரப்பும் ஒப்பந்தம் கையெழுத்திட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்திய நிலையில், இருபக்கமும் பிணைக்கைதிகள் பரிமாறப்பட்டுள்ளனர். ஹமாஸ் எஞ்சிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

காசா இஸ்ரேல்

இந்த சம்பவம் குறித்து ட்ரம்ப் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும் என எச்சரித்தார். ஹமாஸ் அகற்றப்படும்வரை போர் முடிவடையாது என்றும், ஹமாஸ் தனது அதிகாரத்தை சர்வதேச மேற்பார்வையிலுள்ள அமைப்புக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?