குழந்தையிடம் கைவரிசை.. தங்கக் கொலுசை ஆட்டையப் போட்ட பெண்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வந்த குழந்தையிடம் தங்கக் கொலுசு திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் கைது செய்தனர். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (46). இவர் கடந்த மாதம் 13ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார். குடும்பத்தினருடன் தரிசனம் செய்துவிட்டு அனைவரும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, மகேஷ்குமாரின் குழந்தையின் காலில் அணிந்திருந்த தங்கக் கொலுசு மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்தனர். கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த அவரது குழந்தையுடன் பெண் ஒருவர் பேசி, அங்கிருந்த கொலுசை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, திருடிய பெண்ணின் புகைப்படங்களைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி (59) என்பது தெரியவந்தது. விசாரணையில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து, குடும்பத்துடன் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து, தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் கலைவாணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு சவரன் தங்கக் கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!