தந்தேராஸ் பண்டிகை வாழ்த்துகள் ... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பிரார்த்தனை!

 
மோடி
 

தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், அனைவரது வாழ்விலும் வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.சித்தி அளிக்கும் தெய்வமான விநாயகர், செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமி மற்றும் குபேரர் ஆகியோரை வழிபடுவதற்கான சிறப்பு நாள் தந்தேராஸ். இந்த நல்ல நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பாத்திரங்கள், சமையலறைப் பொருள்கள், வாகனங்கள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் வாங்குதற்கு உகந்த நாளாக குறிப்பிடப்படுகிறது.

மோடி

நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தந்தேராஸ் ஒன்றாகும். இந்த நாளில் துடைப்பங்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்  தனது  எக்ஸ் பக்கத்தில்  நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தந்தேராஸ் பண்டிகை நாள் வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் தன்வந்தரி பகவானின் ஆசியுடன் மக்கள் அனைவருக்கும் எப்போதும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். தன்வந்திரி பகவான் அனைத்து மக்களுக்கும் தனது ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்குவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?