களைகட்டிய புத்தாண்டு .... ஆட்டம் ...பாட்டம் ... கொண்டாட்டம்!

 
புத்தாண்டு

 இந்தியா  முழுவதும் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன . சென்னையை பொறுத்தவரை  ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தூள்கிளப்பும்.  இந்த ஆண்டும்  பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து நள்ளிரவில் உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.  

புத்தாண்டு

புத்தாண்டை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னை காமராஜர் சாலையில், புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வந்து இருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19000  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரைகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.   காமராஜர் சாலையில் இரவு 8 மணியளவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.  புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் உட்புறச் சாலையில் இன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

புத்தாண்டு
 புத்தாண்டை வரவேற்கும் வகையில் காமராஜர் சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே மணிகூண்டு இருந்த பகுதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு பிறகு இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டு  சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பினர்.  கைகளை குலுக்கியும் இனிப்புகளையும் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு  கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில்  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் முதல் ட்ரோன் ஷோ நடைபெற்றது.  நாகை வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, கோவை, குமரி நெல்லையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web