விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தது மகிழ்ச்சி... திருமா பளீச்!

 
விஜய் திருமா


 
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது  விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.   விழாவில் பேசும்போது ” 2026ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது” என பேசியிருந்தார்.
திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.  கட்சியில் இருந்து இடைநீக்கம்  செய்யப்பட்டதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தான் இந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

தவெக ஆதவ் அர்ஜுனா


“கட்சியில் இருந்து விலகினாலும் என்னுடைய அரசியல் பயணங்கள் தொடரும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் அடுத்ததாக எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துவந்தன. இந்நிலையில், சமீபத்திய வெளியான தகவலின் படி அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆதவ் அர்ஜுனா த.வெ.கவில் இணைவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் ” விஜய்யுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா  இயங்கப்போகிறார் என்பது மகிழ்ச்சி தான். அவருக்கு வாழ்த்துக்கள். அவரை நாங்கள் இடைநீக்கம் தான் செய்தோம்.

திருமா ஆதவ் அர்ஜுனா

அவர் தான் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக நான் அவருக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினேன். அப்படி இருந்தும் அவர் அதனை மீறினார் என்ற காரணத்தால் தான் அவருக்கு இடைநீக்கம் உத்தரவு வழங்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்தார் என பரவும் தகவல் உண்மை தான். அதனை வைத்து அவர் கட்சியில் இணையப்போகிறார் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக  ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விஜய் கட்சியில் இணைந்து இயங்கப்போகிறார் என்பது மகிழ்ச்சி தான் என்றாலும்  எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web