பரபரப்பு... ரயிலை கவிழ்க்க சதி?... தண்டவாளத்தில் கிடந்த சிலிண்டர்!
Sep 23, 2024, 15:13 IST
இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் இருந்து பிரயக்ராஜுக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தில் சமையல் எரிவாயு கிடந்தது. இதனைக் கண்ட சரக்கு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவசர அவசரமாக ரயிலை நிறுத்த பிரேக் பிடித்தார். அப்போது ஜஸ்ட் மிஸ்ஸில் சிலிண்டருக்கு மிக அருகில் சென்று ரயில் அதிர்ஷ்டவசமாக நின்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே இருந்த 5 கிலோ சமையல் எரிவாயுவை தண்டவாளத்திலிருந்து அகற்றினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அந்த நேரத்தில் சாதுரியமாக செயல்பட்ட சரக்கு ரயில் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .
From
around the
web