ரூ.1.60 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் கடத்தல்.. போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய 4 குருவிகள்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு போலீசார் சுதாகர் மற்றும் முருகவேல் ஆகியோர் இன்று பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியான பையுடன் நான்கு இளைஞர்கள் சுற்றித் திரிந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்கு அழைத்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நான்கு பேரும் சென்னையில் இருந்து ரயிலில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள ஹவாலா பணத்தை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து திருச்சிக்கு பேருந்தில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் நால்வரையும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், அபுபக்கர் சித்திக், ராஜ்முகமது என்பதும், அவர்கள் குருவிகளாகசெயல்படுவதும் தெரியவந்தது. சென்னை பிராட்வே பகுதியில் பணத்தைப் பெற்று வந்ததால், யார் பணத்தைக் கொண்டு வந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!