அதிர்ச்சி வீடியோ... திருமணம் முடிந்ததும் மணமகளின் சகோதரிகளுக்கும் குங்குமம் வைக்கும் மணமகன்!
Feb 1, 2025, 07:20 IST

சமூக வலைதளங்களில் பெரும்பாலான வீடியோக்கள் தினசரி பதிவிடப்படுவதுண்டு. அதில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி ட்ரெண்டிங்கில் முண்ணனியில் வருகின்றன. சமீபகாலமாக திருமண விழாவின் போது நடைபெறும் வித்தியாசமான சம்பவங்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக மாப்பிள்ளை மணமகளை நெற்றியில் திருமணத்தின் போது குங்குமம் வைப்பார். ஆனால் ஒரு வீடியோவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தப்படுகிறது.
அப்போது மணமகன் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்துவிட்டு அருகே இருக்கும் மணப்பெண்ணின் ஆறு சகோதரிகளுக்கும் ஒரு சகோதரருக்கும் நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மணமகளின் செயலை விமர்சித்து வருகின்றனர். புனிதமான திருமண மரபுகளை இப்படி கேலி செய்வது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
From
around the
web