’அவன் கூட சேர்ந்து வாழனும்’.. காவல் நிலையத்தில் டான்ஸர் அட்ராசிட்டி.. அதிர்ந்த போலீசார்!
சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணியளவில் 35 வயது பெண் ஒருவர் வந்தார். அந்த பெண் எனது காதலனுடன் உடலுறவு கொண்டேன். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போலீசார் ரோந்து பணியில் இருந்ததால், பெண் போலீஸ் ஆர்த்தி மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தார். அந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென தன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி, ‘எனக்கு நீதி வேண்டும், என் காதலனுக்கு உடனடியாக திருமணம் செய்துவையுங்கள்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆர்த்தி உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார். இதையடுத்து காவல் நிலையம் வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தீக்குளிக்க முயன்ற பெண் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவள் ஏற்கனவே திருமணமானவர். தற்போது இரவு விடுதியில் நடனமாடிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அறிவழகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அறிவழகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும் உள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். புத்தாண்டு தினத்தன்று இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டபோது, மனைவியை விட்டு பிரிந்து வர முடியாது என அறிவழகன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவல் நிலையம் வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பெண்ணின் கணவரையும், கள்ளக்காதலன் அறிவழகனையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று அந்த பெண்ணையும் அவரது கணவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!