அரசுப் பள்ளியில் மாணவியை ’மாப்’ வைத்து தலைமை ஆசிரியை கடும் தாக்குதல் !
சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டியதாக கூறியதற்காக, தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தரையை துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாப்பை மூலம் சிறுமியை அடித்ததால், சிறுமியின் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டது.

சிறுமி இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தபின், குடும்பத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை கிண்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இந்திரா காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
