கல்நெஞ்சு மாமியாருக்கும் மனசு இரங்கலையே... விடிய விடிய கணவர் வீட்டு முன் கதறியழுத இளம்பெண்!
நீங்களும் பெண் தானே? என்று இரவு முழுவதும் விடிய விடிய கணவர் வீட்டு முன் கதறியழுத படி போராடிக் கொண்டிருந்த மருமகள் கேட்ட கேள்விக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. பெண்ணுக்கு பெண் தானே பல இடங்களில் எதிரியாக இருக்காங்க என்று அந்த பகுதி மக்களே வேடிக்கைப் பார்த்தப்படி கலைந்து சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் விற்பனையாளராக வேலைப் பார்த்து வரும் தன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என இளம்பெண் ஒருவர், கணவர் வீட்டு வாசல் முன்பாக விடிய விடிய கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
திருவாரூர் புகையிலை தோட்டம் பகுதியில் வசித்து மணிகண்டன் (25). இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா சிக்கவலம் கிராமத்தை சேர்ந்த தீபா (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தீபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மணிகண்டன் திருவாரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் 19ம்தேதி இந்த வழக்கு தொடர்பாக தம்பதி இருவரும் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.
2வது விசாரணை வரும் 23ம்தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் கணவர் வீட்டிற்கு வந்த தீபா, வீட்டிற்குள் நுழைந்த போது கணவரின் குடும்பத்தினர், தீபா மற்றும் அவரை சார்ந்தவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், நீங்களும் ஒரு பெண் தானே? தயவு செய்து என் கணவரோடு பேச விடுங்கள் என மாமியாருடன் மன்றாடியதோடு, தயவு செய்து கதவை திறங்க… ப்ளீஸ்ங்க என கணவர் வீட்டு முன்பாக விடிய விடிய கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற திருவாரூர் மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சாயிராபானு ஆகியோர் தீபாவிடம் சமாதானமாக பேசி அவரை சாப்பிட வைத்துள்ளனர்.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தான் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து தன்னை குடும்பத்துடன் சேர்த்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி நேற்று இரவு 8 மணி வரையில் தீபா மற்றும் அவரது குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காத்திருந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
