நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்... 8 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் மாரடைப்பால் சரிந்து பலி!

 
கார்கி ரன்பரா

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இளவயது மாரடைப்புக்கள் அதிகரித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில்  அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை பதற வைத்து வருகிறது. அதில் 8 வயது பள்ளி  சிறுமி ஒருவர் தனது வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார்.


அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இவர்   நேற்று வழக்கம் போல  சீருடை அணிந்து பள்ளிக்கு புத்தக பையுடன் சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்து தனது வகுப்பறை நோக்கி சென்றுள்ளார்.


அந்த சமயம் மாணவிக்கு தனது உடல்நிலை சரியில்லை என உணர்ந்து வளாகத்தில் உள்ள மேஜையில் உட்காருகிறாள்.  அதன் பிறகுஅப்படியே மேசையில் இருந்து சரிந்து கீழே விழுகிறாள்.  பள்ளி ஊழியர்கள் உடனடியாக  சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி செல்கின்றனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து செய்தி நிறுவனங்களில் வெளியான தகவலின்படி, மயங்கி விழுந்த அச்சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web