அனல் பறக்கும் விவாதம்... இன்று நாடாளுமன்றத்தில் S.I.R விவாதத்தை தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி!

 
ராகுல் காந்தி

இன்று மக்களவையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகள் ரவுண்ட் கட்ட முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான முக்கிய விவாதம் இன்று நடைபெற உள்ளது.

இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடக்கி வைக்கிறார். குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமானது முதலே, எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பலமுறை முடங்கின.

ராகுல்

இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி மக்களவையில் எஸ்ஐஆர் விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த விவாதம் மொத்தம் 10 மணி நேரம் நடைபெறும் எனவும், நாளை காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் அரசுத் தரப்பில் இருந்து பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் கே.சி.வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முகமது ஜவைத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் செளத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் படவி மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் விவாதத்தில் பேசவுள்ளனர்.

ராகுல்

இந்த விவாதத்தில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உயிரிழந்தது, வாக்குத் திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை ராகுல் காந்தி எழுப்புவார் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!