இமயமலையில் கடும் பனிச்சரிவு... 9 மலையேற்ற வீரர்கள் பலி’; 4 பேர் மாயம்!

 
இமயமலை பனி

இமயமலையில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டதில்  மலையேற்ற வீரர்கள் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் இமயமலை பகுதிகளின் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்துகளில், இரு நேபாள வழிகாட்டிகள் உட்பட 9 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.முதல் சம்பவம் கௌரிசங்கர் ஊரக நிர்வாகத்தின் கீழ் உள்ள யாலுங்ரீ மலையில் (உயரம் 6,920 மீட்டர்) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஏற்பட்டது. அப்போது அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 7 பேர் பனிச்சரிவில் புதையுண்டனர்.

அவர்களில் இரு நேபாள வழிகாட்டிகள், இரு இத்தாலியர்கள், ஒரு கனடா வீரர், ஒரு பிரான்ஸ் வீரர், ஒரு ருமேனியர் ஆகியோர் அடங்குவர். இவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று நேபாளர்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டினர் காயமடைந்து காத்மண்டு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டனர்.

பனிச்சரிவு

மற்றொரு சம்பவத்தில், கடந்த அக்டோபர் 28 முதல் காணாமல் போயிருந்த இரு இத்தாலிய மலையேற்ற வீரர்கள் மனாஸ்லு பகுதியில் உள்ள பன்பரி மலையில் (உயரம் 6,887 மீட்டர்) சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் உடல்கள் செவ்வாய்கிழமை 5,242 மீட்டர் உயரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுடன் சிக்கியிருந்த இன்னொரு இத்தாலிய வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?