பரபரப்பான சாலையில் கடும் நெரிசல்.. பேருந்தை நிறுத்தி வாலிபரை துரத்திச் சென்ற ஓட்டுநர்!
ஆந்திர மாநிலம் சத்யவேடில் இருந்து பொன்னேரி நோக்கி கும்மிடிப்பூண்டி வழியாக மாதர்பாக்கத்திற்கு 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை தடம் எண்: '112 பி' என்ற அரசு பஸ் புறப்பட்டது. மீஞ்சூரைச் சேர்ந்த விஜய், 28 பேருந்தை ஓட்டி வந்தார். கும்மிடிப்பூண்டி அருகே பெத்திகுப்பம் ரயில்வே மேம்பாலம் ஏறும் போது பேருந்து மெதுவாகச் சென்றது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பஸ் மெதுவாக சென்றது. பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், 'வேலைக்கு நேரம் ஆகிவிட்டது; சீக்கிரம் போ' என்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு பேருந்து நின்றபோது, டிரைவர் விஜயுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, தப்பியோடிய நபரை டிரைவர் விஜய் விரட்டினார். நீண்ட நேரமாகியும் டிரைவர் திரும்பவில்லை. தகவல் அறிந்து அவ்வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இருவரும் பஸ்களை நிறுத்தினர்.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், பஸ்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 30 நிமிடங்களுக்குப் பிறகு, துரத்திச் சென்ற டிரைவர் விஜய், மோதிய பயணியை பிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றார். பின்னர், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலால் விஜய் வலது கண் அருகே படுகாயம் அடைந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரபரப்பான காலை நேரத்தில், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்ததால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, 30 நிமிடம் ஸ்தம்பித்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!