உஷார்... அடர் பனிமூட்டம் நீடிக்கும் ... வெதர்மேன் எச்சரிக்கை!

 
வெதர்மேன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்த நிலையில்  சென்னை உட்பட  வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என  வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. ரோட்டில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பனி மூட்டம் குறித்த  வானிலை முன் அறிவிக்கை குறித்து  வானிலை ஆய்வாளர் தனது எக்ஸ் பக்கத்தில்,” வட தமிழகப் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி காணப்படும். நாளை காலையிலும் இதே போன்ற காட்சிகள் எதிர்பார்க்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.  வடகிழக்கு பருவமழை விலகி சென்ற நிலையில், தற்போது பனி காலம் முடிந்தும் தமிழகம் முழுவதும் அடர் பனிமூட்டம்  காணப்படுகிறது.

பனி, மழை

தற்பொழுது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, இன்று  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web