கொடைக்கானலாக மாறிய சென்னை... கடும் பனிமூட்டத்தால் 25 விமானங்கள் தாமதம்!

 
பனி விமானம்

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில்  கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால்  வாகன ஓட்டிகள் சாலைகள் தெரியாமல் ஊர்ந்து செல்கின்றன.

பனி ரயில்

 இன்று அதிகாலை முதலே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.சாலையில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவி வருவதால்  செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பனி, மழை
காலை 8 மணி ஆகியும் பனிப்பொழிவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றர். குறிப்பாக, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உட்பட புறநகர் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.
சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில்  6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web