தொடரும் கனமழை... இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
மழைக் காலங்களில் மாணவர்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், இன்றும் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகள், ஆறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று நவம்பர் 20ம் தேதி புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளார். மழைக்காலங்களில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீங்க. குறிப்பாக மாணவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!