கனமழை... இன்று ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தத்தால் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளக்காடானது. மண்டபம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நவம்பர் 22ம் தேதி ஒரு நாள் மட்டும் தொடரும் மழை காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!