இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!

 
இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். பிற மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!


மேலும் நாளை டிசம்பர் 6 திங்கட்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ‘ஜாவத்’ புயல் வலுவிழந்து விட்டது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரத்தில் நிலை கொள்ளும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web