இந்தோனேசியாவில் வெளுத்து வாங்கிய கனமழை.. பயங்கர நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியான சோகம்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரில் இருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பேருந்து ஒன்று மரங்கள், மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்டது. இதில், டிரைவர் உட்பட 7 பேர் பலியாகினர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள், பலத்த காயமடைந்தவர்களை மீட்டு, மேடானில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடக்கு சுமத்ரா பிராந்திய காவல்துறையின் போக்குவரத்து இயக்குனர் முஜி எடியன்டோ கூறுகையில், இந்தோனேசிய சாலையில் நிலச்சரிவுகளுக்கு இடையே மக்கள் சில வாகனங்களில் சிக்கிக்கொண்டதாகவும், அவர்களை வெளியேற்ற குறைந்தது 2 நாட்கள் ஆகும் என்றும் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப் பகுதிகளில் 4 இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!