மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை... குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி, குற்றாலம், ஆலங்குளம், செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மத்தளம்பாறை, ஆசாத் நகர், திரவிய நகர், ஆயிரப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது நேற்றும் நீடித்தது. அருவிக்கரை பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்.. சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!