கனமழை... பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு!
புனே மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டதை பாஜக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் மோடியின் புனே பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Narendra Modi's visit to Pune, Maharashtra cancelled due to the heavy rain situation in the city.
— ANI (@ANI) September 26, 2024
(File photo) pic.twitter.com/VJlrBepmzM
முன்னதாக இன்று செப்டம்பர் 26ம் தேதி புனேயில் மெட்ரோ ரயிலை கொடியசைத்து மோடி துவக்கி வைப்பதாக இருந்த நிலையில், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.22,600 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது.
புனே மெட்ரோ ரயில் பிரிவின் திறப்பு விழா, மாவட்ட நீதிமன்றம் முதல் ஸ்வர்கேட் வரை, புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1 நிறைவைக் குறிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வானிலை ஆய்வு மையம் கணித்தபடி இடைவிடாத மழை காரணமாக புனே நகரம் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்தார் புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!