தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விட்டு விட்டு கனமழை தொடர்கிறது.

வானிலை மையம் தெரிவித்ததாவது, இந்த காற்றழுத்த தாழ்வு புயலாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை கடந்து நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 20.4 செ.மீ.க்கும் மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (அக்.22) மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
