சென்னையில் இன்று மிக கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால் சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

மழை

முன்னெச்சரிக்கையாக மெரினா, சேப்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர், குரோம்பேட்டை, பல்லாவரம், கீழ்கட்டளை, நங்கநல்லூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளில் இன்று மாலையிலிருந்து இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.

காலை நேரத்திலிருந்தே பதிவான பலத்த மழை மாலைக்குப் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நகரின் சில குறைந்த நிலப்பகுதிகளில் சாலைகள் முழுவதும் நீர் தேங்கி, வாகன போக்குவரத்து சிரமமடைந்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு, அம்பத்தூர், போரூர் வளாகங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு காணப்படும் நிலையில், போக்குவரத்து போலீசார் (போலீசார்) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை பெருவெள்ளம் வெள்ளம் மழை

இன்று மேலும் தீவிர மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், மழையால் பாதிக்கப்படும் தாழ்நிலைகளில் வசிப்பவர்கள் உச்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?