டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

 
டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் பருவமழை தொடங்கியதால் இடைவிடாது பெய்து வரும் கன மழை காரணமாக தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

டெல்லியில் திடீரென பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டடு நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்து சென்றன. ஒரே இடத்தில் அதிக அளவிலான வாகனங்கள் குவியவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், பல்லப்கர், நொய்டா) அசாண்ட், சஃபிடான், கோஹானா, கன்னூர், சோனிபட், ரோஹ்தக், ஜஜ்ஜார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

From around the web