நேபாள் கனமழை, நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு.. கதறும் மக்கள்!

 
நேபாள் கனமழை
கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கினர். இந்நிலையில், நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 61 பேரைக் காணவில்லை.

நேபாளம் வெள்ளம்

தொடர் மழை காரணமாக காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேபாள பாதுகாப்பு படையை சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் காற்றினால் இடம் பெயர்ந்தன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web