தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் இன்று முதல் இந்த வாரம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை மாணவிகள் மழை

மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாற்றத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!