தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
Dec 9, 2025, 07:20 IST
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் டிசம்பர் 14-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 14ம் தேதி வரையில், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
