இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணிக்கும் அதே பகுதியில் நீடித்திருந்தது. இது வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணிநேரங்களில் மியான்மர்–வங்காளதேச கடற்கரை பகுதிகளை ஒட்டி நகரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் வடதமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளதுடன், தென்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

மேலும், காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லாமல் இருக்கவும், மழை நேரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
