அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களுக்கு அதிகனமழை அலெர்ட்!
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தப் புயல் இன்று காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை மாலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த புயலின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு கோவை திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!