குஜராத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து... 3 பேர் பலி!
குஜராத் மாநிலம், போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம், போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் தீப்பற்றி விபத்திற்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பைலட்டுகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இது குறித்த பேசிய அதிகாரிகள், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக விபத்து நேரிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில் தற்போது மேலும் ஒரு ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!