நவம்பர் 28ம் தேதி ஜார்க்கண்ட் புதிய அரசு பதவியேற்பு... தொண்டர்கள் உற்சாகம்!

 
ஜார்க்கண்ட்


 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன.நேற்று நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை   வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜார்கெண்ட்  முதல்வர் ஹேமந்த்

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், புதிய அரசு பதவியேற்கும் விழா நவம்பர்  28ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன்  தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஹேமந்த் சோரன் ஜார்கண்ட்

இதற்காக மாநில ஆளுநரை சந்தித்த பிறகு  செய்தியாளர்களுடன் பேசிய ஹேமந்த் சோரன், பதவியேற்கும்  தகவலை தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நவம்பர்  26ம் தேதி பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பதவியேற்பு விழா 28ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web