ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா... இளம்பெண்ணுடன் காதலனும் கைது!

 
கிருஷ்ணகிரி ஹாஸ்டல் கேமிரா

ராயக்கோட்டை அருகே பெண்கள் தங்கும் தொழிற்சாலையின் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவில் போராட்டத்திற்கும் காரணமானது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் பதிவு செய்த இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படும் அவரது காதலன் சந்தோஷும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வன்னியபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக லாலிக்கல் பகுதியில் உயர்மாடி விடுதி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் நான்கு பேர் வீதம் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த விடுதியில் தங்கியுள்ளனர்.

லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

இந்த விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டதால், பெண் தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் விடுதி முன்பு அமர்ந்து இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து 2022ம் ஆண்டு முதல் அங்கு பணிபுரிந்து வந்த நீலுகுமாரி குப்தா எனும் பெண் கைது செய்யப்பட்டார்.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வீடியோக்களை பெற்றதாக கூறப்படும் சந்தோஷை பெங்களூருவில் போலீசார் கைது செய்து ஓசூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி வார்டன் சரிதாவிடம் கூட விசாரணை நடைபெற்றுள்ளது.

எட்டு மாடிகள் கொண்ட விடுதியில் மகளிர் போலீசார் நேற்று முழுவதும் சோதனை செய்தனர். ஒரு அறையிலேயே கேமரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொழில்சாலை பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க