ரூ.13 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்.. இளம்பெண் கைது!

 
போதைப்பொருள்

உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மும்பையில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திச் சென்ற நிலையில், இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்து போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்டிராவின் பால்கர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று இரவு துலிஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஏரி அருகே போலீசார் சோதனை நடத்தினர்.

போதை இளம்பெண் பலாத்காரம் பாலியல்

சோதனையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான முறையில் இளம்பெண் நடமாடிக் கொண்டிருந்ததைப் போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவரிடம் சோதனை நடத்திய போது, சோதனையில் ​​அவரிடம் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

ரூ.13.5 லட்சம் (67.5 கிராம்) மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் உகாண்டாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் கடத்திய போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை! 

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web