இந்தியாவில் ஜிபிஎஸ் நோய் தொற்றால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இந்தியாவில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜிபிஎஸ் நோய் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், ஜிபிஎஸ் எனப்படும் 'கிலான் பாரே சிண்ட்ரோம்' என்ற நோய் பரவி வருகிறது. மாசுபட்ட நீர் காரணமாக புனேவில் ஜிபிஎஸ் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 130 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிபிஎஸ் உடலில் உணர்வின்மை, தசை பலவீனம் மற்றும் உடல் பாகங்கள் செயலிழந்து, மரணத்திற்கு வழிவகுக்கிறது.
இந்நிலையில், ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 வயது பட்டய கணக்காளர் 26ம் தேதி சோலாப்பூரில் இறந்தார். இதேபோல், புனேவில் 56 வயது பெண் ஒருவர் புதன்கிழமை ஜிபிஎஸ் நோயால் இறந்தார். இதற்கிடையில், 36 வயது டாக்ஸி ஓட்டுநரும் இந்த நோயால் இறந்துள்ளார். டாக்ஸி ஓட்டுநர் இந்த நோய் காரணமாக 21 ஆம் தேதி புனேவில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டாக்ஸி ஓட்டுநரின் மரணம் தொடர்பாக பிம்ப்ரி சின்ச்வாட் கார்ப்பரேஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜி.எஸ்.பி. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுநரின் மரணம் குறித்து மருத்துவமனையில் நிபுணர் குழு விசாரணை நடத்தியது. அப்போது அவருக்கு நிமோனியா இருப்பதும், கடுமையான சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதும் தெரியவந்தது" என்று கூறப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!