கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உட்பட இந்து அமைப்பினர் கைது!

கோவை மாவட்டத்தில் நேற்று திராவிடர் விடுதலை கழக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உட்பட பல்வேறு இந்து அமைப்பினரைப் போலீசார் கைது செய்தனர்.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை சிவானந்தா காலனியில் நேற்று தமிழ் ஈழமும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கலந்துரையாடினார்.
இந்து கடவுள்களை இழிவாக பேசும் கொளத்தூர் மணியை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் கருத்தரங்கு நடைபெற்ற அரங்கின் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் 40க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து அமைப்பினரைப் போலீசார் கைது செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!