தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கிப் பிடி! தமிழக அரசு அதிரடி !

தனியார் பள்ளிகளுக்கு  கிடுக்கிப் பிடி! தமிழக அரசு அதிரடி !

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள் காரணமாக தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்ற ஆண்டு முதல் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புக்களில் பல முறைகேடுகள் நடப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவைகளை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எந்த பாரபட்சமின்றி எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு  கிடுக்கிப் பிடி! தமிழக அரசு அதிரடி !

வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும்.

குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும்.

பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு  கிடுக்கிப் பிடி! தமிழக அரசு அதிரடி !

அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு  கிடுக்கிப் பிடி! தமிழக அரசு அதிரடி !

அவ்வப்போது ஆன்லைன் வகுப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள் புகார் அளிக்க வசதியாக பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web