பொதுமக்கள் மீது பயங்கர தாக்குதல்.. பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் பலியான சோகம்!

 
 கைபர் பக்துன்க்வா

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இரு தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் முக்கிய தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் காயமடைந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மக்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 38 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பெண்களும் 5 குழந்தைகளும் அடங்குவர். மேலும், படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் செல்லும் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web