போதையில் ரகளை ... தொகுப்பாளினி ரேவதி கைது!

 
ரேவதி

சென்னை கோயம்பேட்டில் மதுபோதையில் ரகளை செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரேவதி, “போலீசார் தன்னை தாக்கியுள்ளனர்” என குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட சிஎம்பிடி போலீசார், ரேவதி மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பாடி பகுதியைச் சேர்ந்த ரேவதி, பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். அண்மையில் தனது மாமாவுடன் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டிக்கு உணவு வாங்க சென்றபோது, இருவரும் மதுபோதையில் இருந்ததாக போலீசார் கூறினர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் தன்னை அடித்ததாகவும், பணமும் செல்போனும் பறிக்கப்பட்டதாகவும் ரேவதி வீடியோவில் கூறினார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ரேவதி மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக திட்டியதும், பணியில் தடங்கல் விளைவித்ததும் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் ரேவதியை தாக்கியதாக கூறப்படும் நபரையும் போலீசார் தேடிவருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!