காவல்நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு காந்திநகரில் வசித்து வருபவர் 42 வயது சுவிசேஷமுத்து . இவர் பிரியாணி கடை நடத்தி வந்தவர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவி முத்துகனி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அக்டோபர் 2ம் தேதி சுவிசேஷமுத்துவின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, உறவினர்களால் தாக்கப்பட்டதாக புகார் கூறினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை எனக்கூறி, சுவிசேஷமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் கிடைத்ததையடுத்து, மண்ணெண்ணெய் கொண்ட கேனுடன் வந்த அவர், காவல் நிலையம் முன்பு தனது உடலில் ஊற்றி தன்னை தீவைத்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
