‘எவா் க்ரீன்’ கப்பல் எவ்வாறு தரை தட்டியது?தீவிர விசாரணை!எகிப்து!

 
‘எவா் க்ரீன்’ கப்பல் எவ்வாறு தரை தட்டியது?தீவிர விசாரணை!எகிப்து!


உலகின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்’ என்ற சரக்கு கப்பல்,மார்ச் 23ம் தேதி கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. புழுதி புயல் காரணமாக கப்பல் தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

‘எவா் க்ரீன்’ கப்பல் எவ்வாறு தரை தட்டியது?தீவிர விசாரணை!எகிப்து!


சூயஸ் கால்வாய் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. உலகின் 12 சதவீத வா்த்தகம் இந்தக் கால்வாயின் மூலமே நடைபெற்று வருகிறது. இதனால் தரைதட்டி நின்ற காலத்தில் உலகம் முழுவதுமான கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

‘எவா் க்ரீன்’ கப்பல் எவ்வாறு தரை தட்டியது?தீவிர விசாரணை!எகிப்து!


கச்சா எண்ணெய், கால்நடைகளை ஏற்றிச்சென்ற 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் சர்வதேச வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. ராட்சத எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் இரவுப்பகலாக நடத்தப்பட்டு ஒரு வாரம் கழித்து எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது.

‘எவா் க்ரீன்’ கப்பல் எவ்வாறு தரை தட்டியது?தீவிர விசாரணை!எகிப்து!

அன்று மாலைக்கு பிறகே சூயஸ் கால்வாயில்கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.’எவர் கிரீன்’ கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணைக்கு எகிப்து அரசு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. கப்பல் தரைதட்டியது குறித்த தகவல்களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி ஆய்வு செய்து வருகின்றனர். புழுதிப்புயல் , கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக்கோளாறு போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் `எவர் கிரீன்’ கப்பல் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்றதற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

From around the web