இன்னும் எத்தனையோ!? பிரான்சில் கொரோனா 4வது அலை! பீதியில் பொதுமக்கள்!

 
இன்னும் எத்தனையோ!? பிரான்சில் கொரோனா 4வது அலை! பீதியில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில் மூன்றாவது அலை விரைவில் உருவாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் எத்தனையோ!? பிரான்சில் கொரோனா 4வது அலை! பீதியில் பொதுமக்கள்!


இந்நிலையில் சில ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளில் மூன்றாவது அலை தற்போது தோன்றி விட்டது. மிக வேகமாக மூன்றாவது அலை பரவி வருகிறது. இதில் பரவும் டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தானவை எனவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்


இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நான்காவது அலை பரவி வருவதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிரான்ஸ் . இந்நாட்டில் ஏற்கனவே மூன்றாவது அலையால் பெரும்பாதிப்பு ஏற்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது நான்காவது அலை தொடங்கி இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்னும் எத்தனையோ!? பிரான்சில் கொரோனா 4வது அலை! பீதியில் பொதுமக்கள்!


கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இந்த பரவல் மனித இனத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இன்னும் எத்தனை அலை தான் இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

From around the web