கொடூரம்.. பேருந்தை முட்டி தண்டவாளத்தில் இழுத்துச் சென்ற ரயில்.. அலறியடித்த பயணிகள்.. 6 பேர் பலி!

 
அந்த பேருந்து

மேற்கு ஆப்பிக்க நாடான நைஜீரியாவில் லாகோஸ் நகரில் இருந்து, அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுள்ளது. அங்கிருந்து சிறிது தூரம் சென்றநிலையில், இகேஜா பகுதியில் அந்த பேருந்து மீது இன்ட்ரா-சிட்டி ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 84 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அந்த பேருந்தை ரயில் சிறிது தூரம் தண்டவாளத்தில் இழுத்துச்சென்றது.

நைஜீரியா

அதேநேரம் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு முன்னதாக இருந்த சிக்னலை, பேருந்து ஓட்டுநர் பின்பற்றாமல் தொடர்ந்து பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் செல்வதை குறிப்பிட்டே அங்கு சிக்னல் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

நைஜீரியா

இதனிடையே, நைஜீரியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இது போன்ற விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசில், விபத்துக்களைத் தடுக்க சமீப ஆண்டுகளில் கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web