தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவன்.. ஆத்திரத்தில் ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்த மனைவி!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா (45). விவசாயியான இவரது மனைவி பச்சையம்மாள் (43), மகன் பாலமுருகன் (23), மகள் பானுப்பிரியா (21) ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் பாலமுருகன் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். மகள் பானுப்பிரியாவுக்கு தாமரைக்குளம் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் சின்னப்பா மற்றும் அவரது மனைவி பச்சையம்மாள் வீட்டில் வசித்து வந்த நிலையில், சின்னப்பா தினமும் குடிபோதையில் பச்சையம்மாளை துஷ்பிரயோகம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினமும் பிரச்னை செய்ததால் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இன்று காலை சின்னப்பா ரத்த வெள்ளத்தில் இரண்டு கை, கால் நரம்புகள் அறுக்கப்பட்டு பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து சின்னப்பாவின் மனைவி பச்சையம்மாளை கைது செய்து விசாரித்தபோது, குடிபோதையில் கணவர் தன்னை அடிக்கடி துன்புறுத்தியதாகவும், அதனால் தான் அவரை கத்தியால் குத்தி கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!