மனைவியின் தம்பியை கொன்ற கணவன்.. சமாதானம் பேச அழைத்து சென்று கழுத்தை நெரித்த கொடூரம்!

 
கொலை

திருநெல்வேலி மாவட்டத்தில், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட கணவன், அவளது தம்பியை சமாதானம் பேச அழைத்து சென்று கொன்று, உடலை 400 அடி ஆழம் உள்ள குழியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (27). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு சீவலப்பேரி சாலையில் உள்ள நெல்லை திருத்துப் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகள் சுதாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியரிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன.

கொலை

மதுக்குடிப்ப பழக்கம் கொண்ட வெள்ளப்பாண்டி, அடிக்கடி மது அருந்தி வந்து சுதாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தீபாவளிக்கு முன்தினம் ஜாமீனில் வெளிவந்தார்.

வீட்டிற்கு சென்றபோது மனைவி இல்லாததால் சுதாவின் தம்பி பெருமாளிடம் (20) அவர் பற்றி விசாரித்தார். வெள்ளப்பாண்டியின் கொடுமை தாங்க முடியாமல் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்த சுதா, வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டதாக பெருமாள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் தீவிரமடைந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை, “சமாதானமாக பேசலாம்” என்று கூறி வெள்ளப்பாண்டி, பெருமாளை தொலைபேசியில் அழைத்து சென்றார். அவருடன் மதுபாலன் (22) என்ற நண்பரும் இருந்தார். மூவரும் மேலபாட்டம் பகுதியில் உள்ள கல்வெட்டான் குழி அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெள்ளப்பாண்டி ஆத்திரமடைந்து தனது லுங்கியால் பெருமாளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை 400 அடி ஆழமுள்ள கல்வெட்டான் குழியில் வீசி விட்டு, மதுபாலனுடன் தப்பிச் சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வெள்ளப்பாண்டியை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் பெருமாளின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?