நான் கஸ்டம்ஸ் அதிகாரி.. என் கிட்டயே வாடகை பணம் கேட்குறியா?.. போலி அதிகாரி அதிரடியாக கைது!

 
ராமு

விருதுநகரில் சுங்க அதிகாரி என கூறி லாட்ஜில் அறையை வாடகைக்கு எடுத்து வாடகை தராமல் மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ஜீவா லாட்ஜில் வரவேற்பாளராக பணிபுரிபவர் அனிஸ்கனி (29). கோவை சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த ராமு (42) என்பவர் இங்குள்ள லாட்ஜில் தனது அடையாள அட்டையைக் காட்டி சுங்க அதிகாரி எனக் கூறி வாடகைக்கு அறை எடுத்துள்ளார்.

ராமு ஒரு வாரமாக அங்கேயே தங்கியிருந்து வாடகை செலுத்தவில்லை. அனிஸ்கனி வாடகை கேட்டபோது, ​​அரசு அதிகாரியிடம் பணம் கேட்பதாக கூறி மிரட்டிவிட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் அனிஸ்கனி புகார் அளித்தார். விசாரணையில் ராமு போலி அடையாள அட்டை தயாரித்து அரசு அதிகாரி எனக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ராமுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web