தமிழக பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை... அண்ணாமலை மறுப்பு!

 
அண்ணாமலை
தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை. இவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து அண்ணாமலை  புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை என கூறியுள்ளார்.

அண்ணாமலை


கோவை விமான நிலையத்தில் இது குறித்து  பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை. தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடவில்லை.

அண்ணாமலை

எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம். தமிழ்நாட்டு மண்ணைவிட்டு எங்கும் போகமாட்டேன். டெல்லி சென்றாலே ஒரே நாள் இரவில் திரும்பி விடுவதே என் பழக்கம். ஒரு தொண்டனாக கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்வதே என் தலையாய பணியாகும்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web