"இனிமேல் என்னால் தாங்க முடியாது... " உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை!

 
மாணவி இளம்பெண் தற்கொலை தூக்கிட்டு

மத்தியப் பிரதேச மாநிலம், சிமாரியாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ரிவா மாவட்டம், சிமாரியா பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த ஒரு மாணவி (பெயர் விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது). இவர், வகுப்பு ஆசிரியரால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. "பாடம் சரியாகப் படிக்கவில்லை" எனக் கூறி, அந்த ஆசிரியர் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், தண்டனை என்ற பெயரில் தினமும் துன்புறுத்தியதாகவும், பல நாட்களாக இந்த ரணத்தை மாணவி தாங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவி

ஆசிரியரின் தொடர் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் மனதளவில் நொந்துபோன அந்த மாணவி, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இரவு தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மரணத்திற்கு முன்னர், மாணவி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், "என் தற்கொலைக்குக் காரணம் எனது வகுப்பு ஆசிரியர்தான். அவர் தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல் இல்லாமல், எல்லை மீறித் தண்டிக்கிறார். இனிமேல் என்னால் இந்தப் போராட்டத்தைத் தாங்க முடியாது" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி இளம்பெண்  மாணவி

இது குறித்துத் தகவல் அறிந்த சிமாரியா பகுதி போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!